தேசியம்
செய்திகள்

Ontarioவில் monkeypox பரவல் கடந்த July மாதம் உச்சத்தை எட்டியது

Ontario மாகாணத்தில் monkeypox தொற்றின் பரவல் கடந்த July மாதம் உச்சத்தை எட்டியுள்ளதாக Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

July மாதம் 15ஆம் திகதி வாரத்தில் தொற்றின் எண்ணிக்கை மாகாணத்தில் உச்சத்தை எட்டியது என Dr. Kieran Moore வெள்ளிக்கிழமை (16) கூறினார்.

அந்த வாரத்தில் PCR சோதனை மூலம் நாளாந்தம் சுமார் 16 முதல் 18 தொற்றுகள் கண்டறியப்பட்டன.

இந்த எண்ணிக்கை தற்போது நாளாந்தம் ஒன்றாக குறைந்துள்ளது.

தற்போது Ontario மாகாணத்தில் பதிவாகும் பெரும்பாலான தொற்றுக்கள் பயணம் தொடர்பானவை என Moore கூறுகிறார்.

Ontarioவில் 32,175 பேர் monkeypox தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இந்த வாரம் வரை Ontarioவில் 656 பேர் உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கை வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று  கறுப்பு ஜூலை: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Paris Olympics: இரண்டாவது பதக்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan

வேலையற்றோர் விகிதம் மீண்டும் சரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment