Quebec மாகாண சட்டமன்றத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் பெண்கள் வெளியேறுகின்றனர்.
அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என 22 பெண்கள் இதுவரை அறிவித்துள்ளனர்.
இலையுதிர்கால தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ள 34 உறுப்பினர்களில் 22 பேர் பெண்களாவார்கள்.
125 ஆசனங்களை கொண்ட சட்டமன்றத்தில் பாதிக்கும் குறைவான இடங்களை பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும் அரசியலில் இருந்து விலகும் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாக உள்ளது.
ஆளும் அரசாங்கத்தில் வெளியேறும் பெண்களில் மூன்று அமைச்சர்கள், இரண்டு முன்னாள் அமைச்சர்களும் அடங்குகின்றனர்