தேசியம்
செய்திகள்

நாடு முழுவதும் வெப்ப எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது!

நாடு முழுவதும் பல மாகாணங்களில் அமுலில் இருந்த வெப்ப எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா நீட்டித்துள்ளது

தெற்கு Ontario, தெற்கு Quebec, New Brunswick, Nova Scotia ஆகிய மாகாணங்களிற்கு இந்த வார இறுதி வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த பகுதியில் சீரற்ற வெப்பநிலை தொடர்வதால், சுற்றுச்சூழல் கனடா வெப்ப எச்சரிக்கையை நீட்டித்துள்ளது.

தெற்கு Ontario, Nova Scotia, Alberta, British Colombia ஆகிய பகுதிகளை இந்த நீட்டிப்பு எச்சரிக்கை உள்ளடக்கியுள்ளது.

இந்த பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை அடையும் அல்லது மிஞ்சும் எனவும் ஈரப்பதத்துடன் வெப்பநிலை குறைந்த 40 டிகிரி செல்சியசை தாண்டும் எனவும் சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது.

இரவில் வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை பெரும்பாலான பிராந்தியங்களில் திங்கள் (08) இரவு அல்லது செவ்வாய் குளிர்ந்த வெப்பநிலை திரும்பும் என கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடுமையான வெப்பநிலை Albertaவின் சில பகுதிகளுக்கு புதன்கிழமை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Jamaicaவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க கனடியர்களுக்கு எச்சரிக்கை 

Lankathas Pathmanathan

நோய் அபாயத்தில் உள்ளவர்கள் booster தடுப்பூசியை  பெற வேண்டும்!

Lankathas Pathmanathan

Trans-கனடா நெடுஞ்சாலை Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கும் RCMP

Lankathas Pathmanathan

Leave a Comment