உக்ரேனிய படைகளுக்கு பயிற்சி அளிக்க கனேடியப் படைகள் இங்கிலாந்து பயணமாகின்றன.
இந்தத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (04) அறிவித்தார்.
225 கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்கள் நான்கு மாதங்களுக்கு இங்கிலாந்தில் தங்கி இருப்பார்கள் என அமைச்சர் கூறினார்.
அங்கு அவர்கள் இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து இராணுவத்தினருடன் இணைந்து உக்ரேனிய இராணுவத்தினருக்கு அடிப்படைகள் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.