குழந்தைகளுக்கான முதலாவது COVID தடுப்பூசியை Health கனடா வியாழக்கிழமை (14) அங்கீகரித்துள்ளது.
Modernaவின் COVID தடுப்பூசி Health கனடாவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு Moderna தடுப்பூசியை வழங்கலாம் என Health கனடா கூறுகிறது.
இந்த ஒப்புதல் கனடாவில் உள்ள இரண்டு மில்லியன் குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி தகுதியை விரிவுபடுத்துகிறது.
பெரியவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவின் நான்கில் ஒரு பங்கு அளவில் இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது
இரண்டு முறை வழங்கப்பட வேண்டிய இந்த தடுப்பூசியை நான்கு வார இடைவெளியில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசி கடந்த மாதம் Health கனடாவிடம் அங்கீகாரத்துக்காக சமர்ப்பட்டு தொடர்ந்தும் மதிப்பாய்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.