NDP வேட்பாளர் நீதன் சானின் தேர்தல் பதாதைகள் பல காணாமல் போயுள்ளதாக Toronto காவல்துறையிலும் Ontario தேர்தல் திணைக்களத்திலும் முறையிடப்பட்டுள்ளது.
Scarborough Centre தொகுதியில் போட்டியிடும் நீதன் சானின் 500க்கும் மேற்பட்ட தேர்தல் பதாதைகள் காணாமல் போயுள்ளதாக முறையிடப்படுகின்றது.
ஒரு வார காலத்தில் 500க்கும் மேற்பட்ட தேர்தல் பதாகைகளை இழந்துள்ளதுடன் மேலும் பல பதாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நீதன் சானின் பிரச்சார குழு தெரிவித்துள்ளது.
Scarborough Centre தொகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனது பிரச்சாரத்தைத் தொடர்வதில் இருந்து இந்த பதாதைகளின் இழப்பு தன்னை தடுக்காது என நீதன் சான் தெரிவித்தார்.
காணாமல் போன பதாதைகள் குறித்து Toronto காவல்துறையினரிடம் புகாரளித்துள்ள நிலையில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.