ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் Torontoவை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் மீது RCMPயினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு December மாதம் ஆரம்பமான விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் கடந்த 19ஆம் திகதி கஜீபன் நடராஜா, சின்னத்தம்பி நடராஜா, கருணாதேவி நடராஜா ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனடா சிறு வணிக நிதித் திட்டம் (CSBF) மூலம் மோசடியாக பெறப்பட்ட நிதி குறித்து இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.
இந்தக் கடன்களில் பல, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன.
இவை ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட மோசடி ஆவணங்கள் கொண்ட விண்ணப்பங்களாகும் என விசாரணைகளில் தெரிய வருகிறது.
இந்த குற்றசாட்டு குறித்து RCMP வெளியிட்ட அறிக்கை
https://www.rcmp-grc.gc.ca/en/news/2022/rcmp-uncovers-complex-fraud-scheme-leading-charges-toronto-family?fbclid=IwAR1AMlECZOeQFPHFWNec5AstBPMijGNlzKr8xXNbCvVnlFKi0atD1tH_I3o