தேசியம்
செய்திகள்

கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் கனடா

கனடா கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் குறித்து தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வரும் அதேவேளை சட்டவிரோத படையெடுப்பிற்கு பதிலளிப்பதற்கு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறோம் என செவ்வாய்க்கிழமை (19) Trudeau கூறினார்.

உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyyயுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் Trudeau தெரிவித்தார்.

ஆனாலும் கனடாவின் இராணுவ உதவி குறித்து பிரதமர் அலுவலகமோ, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்தின் அலுவலகமோ மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

உக்ரைன் மீதான போர் குறித்து செவ்வாய்க்கிழமை காலை Trudeau உலக நாடுகளின் தலைவர்களுடன்  மெய்நிகர் வழியாக கலந்துரையாடினார்.

இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி  Vladimir Putinனின் மகள்களுக்கு கனடா தடை உத்தரவொன்றை அறிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் அவர்களின் தந்தை ஏற்கனவே எதிர்கொள்ளும் சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் நிதி உட்பட பிற அபராதங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

பிரதமர்  Trudeau தலைமையிலான அரசாங்கம் இந்த தடை உத்தரவொன்றை அறிவித்துள்ளது
 இது Putinனுடன் நெருங்கிய 20க்கும் அதிகமானவர்களை இலக்காகக் கொண்ட புதிய தடை உத்தரவு  நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

5 மில்லியன் டொலர் வெற்றி பெற்ற தமிழர்கள்

விமானப்படையின் உலங்கு வானூர்தி விபத்தில் இருவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment