தேசியம்
செய்திகள்

விமானங்களிலும் புகையிரதங்களிலும் முகமூடி கட்டுப்பாடுகளை மாற்றும் திட்டம் இல்லை: போக்குவரத்து அமைச்சர்

கனடாவில் விமானங்களிலும் புகையிரதங்களிலும் முகமூடி கட்டுப்பாடுகளை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra கூறினார்.

கனடாவில் நடைமுறையில் உள்ள முகமூடி கட்டுப்பாடுகள், நிபுணர்களிடமிருந்து பெற்ற ஆலோசனையின் அடிப்படையிலும் தரவுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என அவர் கூறினார்.
தொற்று தொடர்பான சுகாதார நடவடிக்கைகள் தொடர்ந்து மறு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கனேடிய விமானங்களிலும் புகையிரதங்களிலும்  பயணம் செய்யும் போது பயணிகள் முகமூடி அணிய வேண்டும் என்ற நடைமுறை தற்போது அமுலில் உள்ளது.
கனேடியர்கள் முகமூடிகளை அணிவதை கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam, உட்பட பொது சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து பரிந்துரைக்கின்றனர்.
கனடா இப்போது தொற்றின் ஆறாவது அலையில் இருப்பதாக Tam கடந்த வாரம் கூறியிருந்தார்.

Related posts

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு (August 17 – செவ்வாய் )

Gaya Raja

Caribbean தலைவர்கள் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக Trudeau

Lankathas Pathmanathan

Stanley Cup: Winnipeg Jets அணி வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment