தேவை அதிகரிப்பு காரணமாக கனடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
விண்ணப்பங்களின் அதிகரிப்பு காரணமாக சர்வதேச பயணத்திற்காக ஆர்வமுள்ள கனேடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட கால காத்திருப்பு நேரங்களை எதிர்கொள்கின்றனர்.
கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கான கால எல்லை, நேரில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஐந்து நாட்கள், அஞ்சல் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு 17 நாட்கள் என நடைமுறையில் உள்ளதாக கனடிய வேலைவாய்ப்பு, சமூக மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்தது.
கனடியர்கள் மீண்டும் சர்வதைச பயணங்களை ஆரம்பிக்கும் நிலையில் நாடு முழுவதும் Service கனடா கடவுச்சீட்டு விண்ணப்பங்களில் அதிகரிப்பை சந்தித்து வருகிறது.
உடனடி பயணத் தேவைகளைக் கொண்டவர்களுக்கு அவர்களின் பயணத் திகதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
April 2021 முதல் 1.2 மில்லியன் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறுகிறது.