February 23, 2025
தேசியம்
செய்திகள்

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளர் பிணையில் விடுதலை

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளரான Tamara Lich திங்கட்கிழமை (07) காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த வாரம் நடைபெற்ற பிணை விசாரணையின் பின்னர் அவர் சிறையில் இருந்து திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவரது விடுதலையை மறுத்த முந்தைய நீதிபதி சட்டத்தில் தவறு செய்ததாக Ontario நீதிபதி தீர்ப்பளித்தார்.
Albertaவின் குடியிருப்பாளர் Lich 25 ஆயிரம் டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் Ottawaவிலிருந்து 24 மணி நேரத்திற்குள்ளும், Ontarioவிலிருந்து 72 மணி நேரத்திற்குள்ளும் வெளியேற வேண்டும் என நீதிபதி பிணை விடுதலையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் இராணுவ அதிகாரி அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த ஆக்கபூர்வமான உரையாடல்கள் தொடர்கின்றன

Lankathas Pathmanathan

பசுமை கட்சியின் சார்பில் பெண் தமிழ் வேட்பாளர்

Leave a Comment