COVID கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதற்கான திட்டத்தை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளது.
இது குறித்த Conservative கட்சியின் பிரேரணை ஒன்றை இடைக்காலத் தலைவர் Candice Bergen இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த மாத இறுதிக்குள் அனைத்து தேசிய COVID கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை முன்வைக்க அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இதற்கான வாக்கெடுப்பை கட்டாயப்படுத்தும் வகையில் இந்த பிரேரணை அமைந்துள்ளது.