ஆளுநர் நாயகம் Mary Simonக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
புதன்கிழமை (09) அவரது அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டது.
தான் தொற்றுக்கான இலேசான அறிகுறிகளை எதிர்கொண்டு வருவதாக ஒரு அறிக்கையில் Simon கூறினார்.
ஆளுநர் நாயகத்தின் கணவர் Whit Fraserக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது.
அவர்கள் இருவரும் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.