தேசியம்
செய்திகள்

பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan முடிவு

COVID பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan மாகாணம் முடிவு செய்துள்ளது.

தொற்று பரவுவதை தடுப்பதற்கான பொது சுகாதார உத்தரவுகளை Saskatchewan  முடிவுக்கு கொண்டு வருவதாக முதல்வர் Scott Moe கூறினார்.

தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் அல்லது எதிர்மறையான சோதனை முடிவுகளை வழங்குவதற்கான தேவை எதிர்வரும் திங்கட்கிழமை முடிவடையும் என முதல்வர் Moe தெரிவித்தார்.

உட்புற பொது இடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பொது சுகாதார உத்தரவு இந்த மாதம் இறுதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் Moe கூறினார்.

இந்த முடிவு குறித்து Saskatchewan  மாகாண NDP தலைவர்  Ryan Meili  கேள்வி எழுப்பினார்.

தடுப்பூசிக்கான ஆதாரத்தை முடிப்பது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திவிடும் என Saskatchewan தொழிலாளர் கூட்டமைப்பு  இந்த முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது.
அனைத்து COVID கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான திட்டங்களை அறிவித்த முதல் மாகாணம் Saskatchewan ஆகும்.

Related posts

Winnipeg சுற்றுலாத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் காயம்

Lankathas Pathmanathan

GST தள்ளுபடி மசோதா நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசி அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment