கனடிய பிரதமர் Justin Trudeauவுக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (31) காலை நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த வாரம் பிரதமரின் குழந்தைகளில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சென்ற வாரம் வியாழக்கிழமை முதல் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
திங்களன்று அவரது இரண்டாவது குழந்தைக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக Trudeau அறிவித்தார்.
இந்த நிலையில் தான் வீட்டில் இருந்து பணிகளை தொடரவுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.
Trudeau மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
பிரதமரும் அவரது குழந்தைகளும் விரைவாக நலம் பெற வேண்டும் என Conservative தலைவர் Erin O’Toole, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.