பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு சர்வதேச அளவில் படித்த செவிலியர்களை அனுப்ப Ontario முடிவு செய்துள்ளது.
சுகாதார அமைச்சர் Christine Elliott செவ்வாய்க்கிழமை (11) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
COVID காரணமாக பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கும் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களுக்கும் சர்வதேச அளவில் படித்த செவிலியர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என அவர் கூறினார்.
1,200க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் Elliott தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் மருத்துவமனைகளுக்கும் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களுக்கும் இவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என Elliott கூறினார்.