தேசியம்
செய்திகள்

அனைத்து மட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்ட முன்னாள் Toronto நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

கடந்த சனிக்கிழமை மரணமடைந்த முன்னாள் Toronto நகர முதல்வர் Mel Lastmanனின் இறுதிச் சடங்கு திங்கட்கிழமை நடைபெற்றது.

88 வயதான Lastman தனது இல்லத்தில் சனிக்கிழமை மரணமடைந்தார்.

இறுதிச் சடங்கில் பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, Ontario மாகாண முதல்வர் Doug Ford, Toronto நகர முதல்வர் John Tory உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

March 9, 1933 இல் பிறந்த Lastman, புதிதாக இணைக்கப்பட்ட Toronto வின் முதல் நகர முதல்வராக 1998 முதல் 2003 வரை பணியாற்றினார்.

அதற்கு முன், அவர் 1973 முதல் 1997 வரை North York நகர முதல்வராக பணியாற்றினார்.

அரசியலில் நுழைவதற்கு முன்னர், Lastman ஒரு தொழிலதிபராக இருந்தவர்.

1955 இல் அவரது முதல் Bad Boy Superstoreரைத் திறந்தார்.

Related posts

Torontoவில் மூளைக்காய்ச்சல் நோய் பரவல் குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

புதுப்பிக்கப்பட்ட Moderna COVID தடுப்பூசிக்கு அங்கீகாரம்!

Lankathas Pathmanathan

புதிய கல்வி அமைச்சரானார் Jill Dunlop

Lankathas Pathmanathan

Leave a Comment