கனடாவில் Omicron மாறுபாட்டின் முதல் இரண்டு தொற்றாளர்கள் ஞாயிற்றுக்கிழமை Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்.
நைஜீரியாவுக்குச் சென்று திரும்பிய Ottawaவைச் சேர்ந்த இருவர் தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.
வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட முதல் Omicron மாறுபாடு இதுவாகும்.
இந்த புதிய மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் திங்கட்கிழமை Ottawaவில் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்டதாக தெரியவருகிறது.
Ontarioவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Kieran Moore இந்த அறிவித்தலை வெளியிட்டார்
இவர்களில் தொற்று உறுதியான இருவர் Ottawaவை சேர்ந்தவர்கள் எனவும் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் Hamiltonனைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.
தவிரவும் திங்கட்கிழமை Quebecகில் Omicron மாறுபாட்டின் ஒரு தொற்றை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கனடாவில் இதுவரை Ontario மற்றும் Quebec ஆகிய மாகாணங்களில் இந்த புதிய மாறுபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆனாலும் கனடா முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள் பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ள ஏழு தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றிலிருந்து பயணம் செய்தவர்களை இலக்கு வைத்து சோதனைகளை முன்னெடுக்கின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து Alberta திரும்பிய 150க்கும் மேற்பட்டவர்கள் Omicron மாறுபாடு குறித்த எச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.