வணிகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமான புதிய இலக்கு வைக்கப்பட்ட தொற்று உதவி மசோதாவை Liberal அரசாங்கம அறிமுகப்படுத்துகிறது.
புதன்கிழமை மாலை Liberal அரசாங்கம் C2 என்ற இந்தத் தொற்று கால உதவி மசோதாவை அறிமுகப்படுத்தியது.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதா வணிகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் அடுத்த வருடத்தின் இலைதுளிர் காலம் வரை சில நிதி உதவிகளை தொடர்ந்து வழங்கும்.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், தொற்றின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வணிகங்களுக்கம் தொழிலாளர்களுக்குமான உதவித் திட்டங்களை தொடர்நது வழங்கும்.