மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை Ontario நீட்டிக்கின்றது.
மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அனைத்து அவசரகால உத்தரவுகளையும் March மாதம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டி வைத்திருக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தை Ontario நீட்டித்துள்ளது.
செவ்வாய்கிழமை மாகாண சபையில் Solicitor General Sylvia Jones முன்வைத்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, December மாதம் 1ஆம் திகதி காலாவதியாகவிருந்த அவசரகால உத்தரவுகள் நீட்டிக்கப்படுகிறது.
இந்த பிரேரணை Doug Ford அரசாங்கத்திற்கு அவசரகால உத்தரவுகளை March மாதம் 28ஆம் திகதி வரை நீட்டிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.
Ontarioவை மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு உத்தரவும் அமைச்சரவையால் 30 நாள் அதிகரிப்புகளில் நீட்டிக்கப்பட வேண்டும்.