தேசியம்
செய்திகள்

British Colombiaவில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் மரணம்

British Colombia மாகாணத்தின் Abbotsford நகரில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் இறந்துள்ளன.

வெள்ளப் பெருக்கினால் சுமார் 500 கால் நடைகள் இறந்துள்ளதாக முதற்கட்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக BC பால் பண்ணை சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரக்கூடும் என சங்கம் ஒரு  அறிக்கையில் எச்சரிக்கின்றது.

இப்பகுதியில் உள்ள சுமார் 23,000 கால்நடைகளில், 6,000 கால்நடைகள் வெள்ளப்படுதியிலிருந்து வேறு பண்ணைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

சுமார் 16,000 கால்நடைகள் தங்கள் சொந்த பண்ணைகளில் தங்கியிருப்பதாக சங்கம் கூறுகிறது.

Related posts

Manitobaவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை திட்டம்

Gaya Raja

LGBTQ உரிமை கல்விக்கு ஆதரவாகவும் எதிராகவும்  பேரணிகள்

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: பத்தாவது நாளில் பதக்கம் எதையும் வெல்லாத கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment