மேற்கு கனடாவில் COVID Delta மாறுபாட்டின் இரண்டு புதிய வழித்தோன்றல்களை சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்
இருப்பினும், இவை மிகவும் பரவக்கூடியவையா அல்லது மிகவும் கடுமையான நோயை உண்டாக்குகின்றனவா என்பதைத் தீர்மானிக்க கூடுதல் சான்றுகள் தேவைப்படுகின்றன.
British Colombia, Alberta, Saskatchewan ஆகிய மாகாண சுகாதார அதிகாரிகள் இந்த கண்காணிப்பை மேற்கொள்கின்றனர்.
இந்த புதிய பிறழ்வுகள் முதன் முதலில் அமெரிக்க மாநிலமான Idahoவில் கண்டறியப்பட்டு கோடை காலத்தில் கனடாவிற்கு பரவியது.
Delta வழித்தோன்றல்கள் அதிகமாக பரவக்கூடியவையா என்பதைத் தீர்மானிக்க எந்தத் தகவலும் இல்லை என Saskatchewanனுக்கான தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.