தேசியம்
செய்திகள்

இரசாயன ஆலையில் வெடி விபத்து – ஒருவர் மரணம்

Toronto கிழக்கில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.Don Mills and Eglinton சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள இரசாயன ஆலையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதில் ஒருவர் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் பலர் இரசாயன தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர்.

தொழிலாளர், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு இந்த வெடிப்பு குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஒரு ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan

Sudburyயில் சுரங்கப் பாதையில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்!

Gaya Raja

குழந்தை நல கொடுப்பனவில் மிகக் குறைந்த வருடாந்த அதிகரிப்பு!

Gaya Raja

Leave a Comment