தேசியம்
செய்திகள்

குழந்தை நல கொடுப்பனவில் மிகக் குறைந்த வருடாந்த அதிகரிப்பு!

கனேடிய குடும்பங்கள் குழந்தை நல கொடுப்பனவில் மிகக் குறைந்த வருடாந்திர அதிகரிப்பைக் காண்கின்றன.

கனடா குழந்தை நல கொடுப்பனவுகள் இந்த ஆண்டு ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகளுக்கு, அதிகபட்சம் $6,833 ஆகவும், ஆறு முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, $5,765 ஆகவும் இருக்கும் என அரசாங்கம் செவ்வாய்கிழமை அறிவித்தது.

இதன் மூலம் கொடுப்பனவுகளின் மொத்த மதிப்பு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது ஒரு சதவீதம் மட்டுமே உயரும். இது ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு $5 அதிகரிப்பாகும் .

இந்த கொடுப்பனவுகள் வறுமை விகிதங்கள் மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் குடும்பங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என சமூக அபிவிருத்தி அமைச்சர் Ahmed Hussen கூறினார்

இந்த ஆண்டு 1,200 டொலருக்கு மேல் பெற்றோருக்கு அரசாங்கம் அனுப்பும் கூடுதல் குழந்தை நல கொடுப்பனவுகளையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

கனடா தினத்தை இரத்து செய்ய கோரிக்கைகள்!

Gaya Raja

கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சராசரியை விட குறைவான பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan

மேலும் நாடுகளை உள்ளடக்கிய பயணத் தடை அமுலில்!

Lankathas Pathmanathan

Leave a Comment