December 12, 2024
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

நாடாளுமன்றத்தை அவசரகால நிலையில் மீண்டும் கூட்ட வேண்டும்: பசுமை கட்சியின் தலைவி வலியுறுத்தல்!

ஆப்கானிஸ்தானின் நெருக்கடியை எதிர்கொள்ள கனேடிய நாடாளுமன்றத்தை அவசரகால நிலையில் மீண்டும் கூட்ட வேண்டும் என பசுமை கட்சியின் தலைவி Annamie Paul அழைப்பு விடுத்துள்ளார்.

Justin Trudeau தேர்தலுக்கு அழைப்பு விடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்திருந்தாலும் சட்டப்படி மீண்டும் அமர்வுகளை நடத்துவது சாத்தியம் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் ஆளுநர் நாயகத்திடம் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கோரவேண்டும் என பசுமைக் கட்சியின் தலைவி இந்த வாரம் தனது கொள்கை அறிவிப்பின் போது வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் சுயாதீன அரசியலமைப்பு வழக்கறிஞர் ஒருவருடன் Paul ஆலோசனை நடத்தியதாக பசுமைக் கட்சி தெரிவித்துள்ளது.

அவசர சட்டத்தின் பிரிவு 58.3ன் கீழ் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும் என Paul தெளிவு படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் ஆப்கானிஸ்தானின் சூழ்நிலைகள் குறித்தும் அதற்கு கனடாவின் பதில் நடவடிக்கை குறித்தும் அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் Paul கோரியிருந்தார்.

ஆப்கானிஸ்தானில் கனேடிய படையினரின் முயற்சிகளுக்கு உதவியவர்களை நாங்கள் கைவிட முடியாது என Paul கூறினார்.

ஆனால் தேர்தலுக்காக கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது சாத்தியமில்லை என்று அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Related posts

ஆரம்பமாகும் Ontario மாகாணசட்டமன்றஅமர்வுகள் : ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு வற்புறுத்தும் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்திற்கு உடனடித் திட்டங்கள் இல்லை!

thesiyam

கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான பயணங்களை முன்னெடுக்க வேண்டாம்: ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

COVID போராட்டங்களின் முக்கிய அமைப்பாளர்கள் மூவர் மீது புதிய குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment