December 12, 2024
தேசியம்
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் கனடா 24 பதக்கங்கள் வெற்றி!

Tokoyo ஒலிம்பிக் போட்டியில் கனடா மொத்தம் 24 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தகோடை கால ஒலிம்பிக் போட்டியில் கனடா இம்முறை முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

புறக்கணிக்கப்படாத கோடைகால ஒலிம்பிக்கில் கனடா அதிக பதக்கங்களை வெற்றிபெற்றது இம்முறையேயாகும்.

7 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் என இம்முறை கனடிய வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் முதலாவது பதக்கமாக வெள்ளிப் பதக்கத்தை வெற்றிபெற்ற கனடா, இறுதிப் பதக்கமாக தங்கப் பதக்கத்தை தனதாக்கியது.

Rio ஒலிம்பிக்கைப் போலவே, இம்முறையும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பதக்கங்களை கனடாவுக்காக வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

இம்முறை அதிகாரப்பூர்வ பதக்க நிலைகளிலும், ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையிலும் கனடா 11ஆவது இடத்தைப் பிடித்தது.

Related posts

வெளிப்படையான கிளர்ச்சியை எதிர்கொள்ளும் O’Toole

Lankathas Pathmanathan

Ajax தமிழர் மரணத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

கடத்தப்பட்ட 8 வயது சிறுவனை மீட்க Amber எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment