தேசியம்
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை விரைவாக நீக்குவது முதற்குடியினரிடம் தொற்றின் பரவலை அதிகரிக்கும்!

COVID  கட்டுப்பாடுகளை விரைவாக  நீக்குவது நான்காவது அலைக்கு காரணமாக அமையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை மாகாணங்கள் நீக்கும் நிலையில் அது முதற்குடி மக்களிடையே Delta மாறுபாட்டின் பரவலை அதிகரிக்கும் என சுதேச சேவைகள் அமைச்சர் Marc Miller கவலை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இரண்டாவது அலையின் போது நாட்டின் பல பகுதிகள் மிக விரைவாக திறக்கப்பட்டன எனக் கூறிய அமைச்சர், அது பல முதற்குடி சமூகங்களுக்கு ஆபத்தான பேரழிவை ஏற்படுத்தியது எனவும் சுட்டிக்காட்டினார்.

முதற்குடி சமூகங்களின் அதிக மக்கள் தொகை கொண்ட Prairie மாகாணங்கள்,  பெரும்பாலான COVID கட்டுப்பாடுகளிலிருந்து விலகிச் செல்கின்றன.
நெரிசலான வாழ்க்கை நிலைமைகள் உள்ளிட்ட காரணங்களினால் முதற்குடி மக்கள் மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக தொற்றை பெற வாய்ப்புள்ளது என அமைச்சர் Miller  கூறினார்.

Related posts

கனடாவில் உள்ள Belarus தூதரகம் மூடப்படுகிறது!

Gaya Raja

காவல்துறை அதிகாரி பலியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த புதிய விவரங்கள்

Lankathas Pathmanathan

பெரும் உயர்வை எதிர்கொள்ளும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment