British Columbia மாகாணத்தில் COVID தொற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு 7 முதல் 10 நாட்களுக்கு இரட்டிப்பாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது Delta மாறுபாட்டின் தாக்கம் என நிபுணர்கள் கூறுகின்றனர். Delta இப்போது British Columbia மாகாணத்தில் மிகவும் பொதுவான மாறுபாடு என நிபுணர்கள் தெரிவித்தனர்
COVID தொற்றின் எண்ணிக்கை British Columbiaவில் அதிகரித்து வருகின்றது. ஜந்து நாட்களில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகளை புதன்கிழமை சுகாதார அதிகாரிகள் அறிவித்தார்.
Delta மாறுபாடு தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கான ஒரு காரணி என தெரிவிக்கப்படுகிறது
அதேவேளை கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.