December 12, 2024
தேசியம்
செய்திகள்

நான்காவது நாளாகவும் Ontarioவில் 200க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Ontarioவில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடர்ந்து நான்காவது நாளாகவும் 200க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.
ஞாயிற்றுக்கிழமை சுகாதார அதிகாரிகளினால் 218 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன. முன்னதாக சனிக்கிழமை 258, வெள்ளிக்கிழமை 226, வியாழக்கிழமை 218 என தொற்றுக்கள் Ontarioவில் பதிவு செய்யப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதன் மூலம் Ontarioவின் தொற்றுக்களின் ஏழு நாள் சராசரியும் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை ஏழு நாள் தொற்றுக்களின் சராசரி 189ஆக அதிகரித்தது.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலையுடன் 9 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

Related posts

Francophone குடிவரவு இலக்கை கடந்த வருடம் எட்டிய கனடா

Lankathas Pathmanathan

வாகனம் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ் இளைஞர்!

Lankathas Pathmanathan

ரஷ்யா மீது கனடா புதிய தடைகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment