September 16, 2026
தேசியம்
செய்திகள்

முன்னாள் NDP தலைவர் Ed Broadbent மரணம்

புதிய ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் Ed Broadbent 87 வயதில் காலமானார்.

Ed Broadbent முதன்முதலில் 1968 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் 21 ஆண்டுகள் புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

முதலில் Oshawa-Whitby தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், பின்னர் Ottawa மத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

1975 முதல் 1989 வரை புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக அவர் 14 ஆண்டுகள் பதவி வகித்தார்.

Liberal, Conservative என நான்கு பிரதமர்கள் நாட்டை வழிநடத்திய காலகட்டம் அதுவாகும்.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Ed Broadbent 1936ஆம் ஆண்டு Oshawaவில் பிறந்தவர்.

Related posts

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திட்டத்தை Mark Carney விளக்க வேண்டும் என வலியுறுத்தல்?

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசி பாதுகாப்பானது ; கனடிய பிரதமர் உறுதி

Gaya Raja

ஐந்தாவது அலையை எதிர்கொள்ள புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment