September 11, 2024
தேசியம்
செய்திகள்

AstraZeneca தடுப்பூசி; இரத்த உறைவால் Quebec இல் பெண் ஒருவர் மரணம்!!

AstraZeneca தடுப்பூசியை  பெற்ற பின்னர் இரத்த உறைவால் பெண் ஒருவர் மரணித்த சம்பவம் Quebecகில் நிகழ்ந்துள்ளது.

Quebecகின் பொது சுகாதார இயக்குனர் செவ்வாய்க்கிழமை இதனை உறுதிப்படுத்தினார். Montreal மருத்துவமனை ஒன்றில் 54 வயதான பெண் ஒருவர் இவ்வாறு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

கனடாவில் AstraZeneca தடுப்பூசியால் ஏற்படக்கூடிய இரத்த உறைவால் மரணித்த முதலாவது பெண் இவராவார். ஆனாலும்  AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் தொற்றின் அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக பொது சுகாதார இயக்குனர் வலியுறுத்தினார். Quebecகில் இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

எதிர்க்கட்சிகளுடன் இந்த வாரம் கலந்துரையாடும் பிரதமர்

Gaya Raja

Grandparent scams மோசடியால் கடந்த ஆண்டு $9.2 மில்லியன் நிதி இழப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மேலும் 20 ஆயிரம் ஆப்கானியர்கள்!

Gaya Raja

Leave a Comment