பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paul மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இரத்து செய்யப்பட்டதை பசுமைக் கட்சி உறுதி செய்கிறது.
நாளை திட்டமிடப்பட்ட அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இரத்து செய்யப்பட்டதை
திங்கட்கிழமை நடைபெற்ற செய்தி மாநாட்டில் Paul உறுதிப்படுத்தினார்.
தற்போதைய கட்சியில் கூட்டாட்சி சபையால் இதேபோன்ற முயற்சிகள் எதுவும் அடுத்த தேர்தல்வரை முன்மொழியப்படாது எனவும் அவர் கூறினார். Paulலின் கட்சி அடிப்படை உறுப்புரிமையை நிறுத்தி வைத்திருக்கும் மதிப்பாய்வும் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
சமீபத்திய மாதங்களில் கட்சியின் கூட்டாட்சி சபையால் தனது தலைமைக்கு எதிராக நடத்தப்பட்ட ஒருதலைப்பட்ச பிரச்சாரம் காரணமாக பதவி விலகுவது குறித்து தான் எண்ணிப்பார்ததாக Paul கூறினார்.