கனடா இந்த வாரம் 7.1 மில்லியன் COVID தடுப்பூசிகளைப் பெற உள்ளது. இவற்றில் 3.1 மில்லியன் Pfizer தடுப்பூசிகளும், 4 மில்லியன் Moderna தடுப்பூசிகளும் அடங்குகின்றது.
இந்த நிலையில் வரவிருக்கும் வாரங்களில், 66 மில்லியன் தடுப்பூசிகள் என்ற வரம்பை கனடா கடக்கும் என Brigradier General Krista Brodie தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தகுதிவாய்ந்த ஒவ்வொரு கனேடியருக்கும் தடுப்பூசி போட கனடாவில் போதுமான அளவு இருப்பதைக் குறிக்கிறது எனவும் அவர் கூறினார்.
கனடாவில் திங்கட்கிழமைவரை 80 சதவீதமான கனேடியர்கள் ஒரு தடுப்பூசியையும் 55 சதவீதத்திற்கும் அதிகமான கனேடியர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.