இரத்த தானத்திற்கு அவசர அழைப்பொன்றை கனேடிய இரத்த வங்கி விடுத்துள்ளது.
கனடா முழுவதும் அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் 23 ஆயிரம் இரத்த தானம் தேவைப்படுவதாக கோரப்பட்டுள்ளது. COVID தொற்றினால் நிறுத்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
அனைத்து இரத்த வகைகளும் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும் அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தக்கூடிய O-negative இரத்த வகை கொண்ட நன்கொடையாளர்கள் தேவை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.