Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சுகாதார அமைச்சர் Christine Elliott இந்த உறுதிமொழியை வெளியிட்டார். Ontario மீள திறக்கும் திட்டத்தின் இரண்டாவது படிக்கு முன்னேறுவது குறித்து முடிவெடுப்பதற்காக மாகாணத்தின் உயர் மருத்துவரை சந்திக்க உள்ளதாக நேற்று முதல்வர் Doug Ford தெரிவித்தார்.
Ontarioவில் இன்று வரை, 75 சதவீதம் பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 19 சதவிகிதத்தினர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
மீள திறக்கும் திட்டத்தின் இரண்டாவது படிக்கு முன்னேறுவதற்கு Ontarioவில் 20 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.