மனைவியை கொலை செய்ததற்காக தமிழர் ஒருவருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை Ontario உயர் நீதிமன்ற நீதிபதியால் விதிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு December மாதம், தனது 46 வயதான மனைவியான ஜெயந்தி சீவரத்தினத்தை படுகொலை செய்ததாக 45 வயதான கதிர்காமநாதன் சுப்பையா மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜெயந்தி சீவரத்தினம், Scarborough வில் தனது இல்லத்தில் அவரது கணவனால் பாதிக்கப்பட்ட பல காயங்களுடன் இறந்தார்.
ஜெயந்தி சீவரத்தினத்தின் கொலையை ஒரு கோழைத்தனமான தாக்குதல் என நீதிபதி Ian MacDonnell தனது தீர்ப்பில் தெரிவித்தார். தற்போது 49 வயதான கதிர்காமநாதன் சுப்பையா, ஏற்கனவே தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நிலையில் மேலதிகமாக ஐந்து வருடங்களுக்கு குறைவான காலம் சிறை தண்டனையை எதிர்கொள்கிறார்.