February 23, 2025
தேசியம்
செய்திகள்

குடியிருப்பு பாடசாலைகள் ;கனடா முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்: ஐ. நா. அலுவலகம்

குடியிருப்பு பாடசாலைகளின் புதைகுழிகள் குறித்து கனடா முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்  என  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்தது.

இந்த விடயத்தில் இரட்டிப்பு முயற்சிகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கனடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. British Colombiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலைகளின் புதைகுழிகளில் இருந்து 215 பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பழங்குடியின  குழுக்களும், ஐக்கிய நாடுகள் சபையையும், குடியிருப்பு பாடசாலை தளங்களில் குறிக்கப்படாத அனைத்து கல்லறைகளையும் தேட உதவ மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் அனைத்து மட்டங்களிலும் உள்ள கனடிய அதிகாரிகளும் பழங்குடி குழந்தைகளின் இறப்புகள் குறித்து முழுமையான விசாரணைகளை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்துகின்றது

Related posts

AHS ஊழல் குற்றச்சாட்டு: துணை அமைச்சர்களை மாற்ற Alberta முதல்வர் முடிவு

Lankathas Pathmanathan

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள்

Lankathas Pathmanathan

Blue Jays அணியின் playoff தொடர் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment