February 22, 2025
தேசியம்
செய்திகள்

தடுப்பூசிகளை கலந்து வழங்க முடியும்: NACI அனுமதி

COVID  தடுப்பூசிகளை கலந்து வழங்க முடியும் என தேசிய தடுப்பூசி குழு அனுமதி வழங்கியுள்ளது.

NACI எனப்படும் கனடாவின் நோய்த் தடுப்பு தொடர்பான தேசிய ஆலோசனைக் குழு  அதன் தடுப்பூசி வழங்களுக்கான வழிகாட்டுதல்களை மாற்றியுள்ளது. தடுப்பூசிகளை கலந்து வழங்குவதை அனுமதிக்கும் வகையில் இந்த மாற்றம் அமைந்துள்ளது.  

மத்திய சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலை அறிவித்தனர். AstraZeneca தடுப்பூசியின் முதலாவது வழங்கல் இரண்டாவது AstraZeneca தடுப்பூசி மூலம் பின் தொடரலாம் அல்லது Pfizer அல்லது Moderna தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக வழங்கலாம் என இந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டது.

முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளுக்கு Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளை கலக்கலாம் எனவும் NACIஇன் இந்த புதிய வழிகாட்டுதல் அறிவுறுத்துகிறது. இந்த ஆலோசனை மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு தடுப்பூசி திட்டங்களை நிர்வகிக்க பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழிமுறைகளை வழங்குகிறது என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam கூறினார். 

Related posts

Markham- Thornhill தொகுதி Conservative கட்சி வேட்பாளர் தேர்தலில் தமிழர்

Lankathas Pathmanathan

Montreal நகரில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan

கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது?

Lankathas Pathmanathan

Leave a Comment