Ontarioவில் புதிய சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி நியமிக்கப்படவுள்ளார்.
தற்போது சுகாதார தலைமை மருத்துவ அதிகாரியாக உள்ள வைத்தியர் David Williamsசின் பதவியை வைத்தியர் Kieran Moore ஏற்கவுள்ளார். Moore தனது புதிய பதவியை June மாதம் 26ஆம் திகதி ஏற்கவுள்ளார்.
மாகாண சுகாதார அமைச்சர் Christine Elliott இதனை அறிவித்தார். Williams, June மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். Williams இந்த பதவியை ஐந்து ஆண்டுகளாக வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.