AstraZeneca தடுப்பூசியினால் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக New Brunswickகில் வெள்ளிக்கிழமை இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது.
April மாதம் 11ஆம் திகதி தனது முதலாவது AstraZeneca தடுப்பூசியை பெற்ற 50 வயதான ஒருவரே மரணமடைந்துள்ளார். இவர் 17 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனாலும் AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய அபாயங்கள் அரிதானவை என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் New Brunswick மாகாண தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Jennifer Russell கூறினார்.
அதேவேளை குறைந்தது எட்டு வாரங்களுக்கு முன்னர் AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக பெற்ற 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற தகுதியுடையவர்கள் என New Brunswick மாகாணம் அறிவித்தது.
New Brunswick, May மாதம் 31ஆம் திகதி காலாவதியாகும் 3,500 AstraZeneca தடுப்பூசிகளை தன்வசம் கொண்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது