Ontarioவில் திங்கட்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக 2,200க்கும் குறைவான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
திங்கட்கிழமை 2,170 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை Ontarioவில் 2,199 தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் பதிவான வழக்குகளின் ஏழு நாள் சராசரி 2,352 ஆக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு, இந்த எண்ணிக்கை 3,016 ஆக இருந்தது
திங்கட்கிழமை நான்கு மரணங்களும் பதிவாகின. March மாதம் 22 ஆம் திகதிக்கு பின்னரான மிகக் குறைந்த தினசரி இறப்பு எண்ணிக்கை இதுவாகும் தொற்றின் ஆரம்பத்தில் இருந்து Ontarioவில் 5 இலட்சத்து 11 ஆயிரத்து 486 தொற்றுகளும் 8 ஆயிரத்து 489 மரணங்களும் பதிவாகியுள்ளன.