கனடாவில் mRNA தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய 200 மில்லியன் டொலர் உதவியை அரசாங்கம் அறிவித்தது.
மத்திய கண்டுபிடிப்பு அமைச்சர் Francois-Philippe Champagne இந்த அறிவித்தலை வெளியிட்டார். எதிர்கால தடுப்பூசி மற்றும் சிகிச்சை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டது.
Mississauga, Ontarioவை தளமாக கொண்ட தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் ஆண்டுக்கு 112 மில்லியன் முதல் 640 மில்லியன் mRNA தடுப்பூசிகள் வரை உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.