தேசியம்
செய்திகள்

தடுப்பூசி செயல்பாடுகளின் புதிய துணைத் தலைவராக Brigadier General Krista Brodie நியமனம்

கனடாவின் தடுப்பூசி செயல்பாடுகளின் புதிய துணைத் தலைவராக Brigadier General Krista Brodie நியமிக்கப்பட்டுள்ளார்.  

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் திங்கட்கிழமை இந்த நியமனத்தை அறிவித்தது. Brigadier General Brodie கடந்த November மாதத்தில் ஆரம்பமான தடுப்பூசி விநியோக கட்டமைப்பில்  முக்கிய பங்காற்றி வருகிறார்

இதற்கு முன்னர் இந்தப் பதவியில் இருந்த Major General Danny Fortin கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து விலகினார். ஒரு இராணுவ விசாரணையின் காரணமாக Fortin தனது பதவியில் இருந்து விலகுவதாக கனேடிய ஆயுதப்படைகளும் தேசிய பாதுகாப்புத் துறையும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. Fortin, 30 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாலியல் முறைகேடு முறைப்பாட்டை எதிர்கொள்கிறார் என CTV செய்தி சேவை  தெரிவித்துள்ளது.

இதேவேளை Fortinனில் பதவி விலகல் குறித்து வெளிப்படையாக தகவல்களை வெளியிடுமாறு மத்திய அரசாங்கத்தை எதிர்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

Related posts

Quebec பேருந்து விபத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Pride நிகழ்வுகளின் பாதுகாப்பிற்கு $1.5 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan

இரத்தம் சிந்துவது குறித்த அச்சம்: தொடரும் அவசரகாலச் சட்டம் குறித்த விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment