December 12, 2024
தேசியம்
செய்திகள்

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க முடியாது: கனடா

குற்றம் சாட்டப்பட்ட இலங்கையின் போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க கனடிய அரசாங்கம் மறுத்துள்ளது.

முன்னாள் விமானப்படை தளபதியும், போர்க்குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டவருமான சுமங்கள டயஸ், இலங்கையின் கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.  ஆனாலும் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள கனடிய அரசாங்கம் மறுத்துள்ளது.

தமிழ் கனேடியர்களும், தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அவர் ஒரு போர்க் குற்றவாளியென குற்றம் சாட்டிய நிலையில் கனேடிய அரசாங்கம் அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. கனடாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக இவரை நியமிக்க கடந்த ஆண்டு Novemberரில் வெளியான அறிவிப்பு கனடாவில் கடும் எதிர்ப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Saskatchewan முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் 14 சாத்தியமான புதைகுழிகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

வட அமெரிக்க கண்டத்தின் சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலர் கனடா

Lankathas Pathmanathan

கனடிய வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது அவசரகாலச் சட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment