COVID தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த Manitoba மாகாணம் ஒன்றுகூடல் அளவு கட்டுப்பாடுகளை செயல்படுத்துகிறது.
மாகாணத்தில் தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாகாண அரசு புதிய பொது சுகாதார உத்தரவுகளை அறிமுகப்படுத்துகிறது. முதல்வர் Brian Pallister, தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Brent Roussinனுடன் இணைந்து திங்கட்கிழமை மாலை இந்த உத்தரவுகளை அறிவித்தார்.
இந்த உத்தரவுகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் நான்கு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.