30 வயதுக்கும் மேற்பட்ட கனேடியர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்படலாம் என தேசிய தடுப்பூசி குழு தெரிவித்துள்ளது.
NACI என அழைக்கப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு, AstraZeneca தடுப்பூசியைப் பெற கூடியவர்களுக்கு பரிந்துரைக்கும் தகுதி வயதை குறைத்துள்ளது. ஆனாலும் இதற்கான இறுதி தீர்மானத்தை எடுக்கும் முடிவு மாகாணங்களிடமும் பிரதேசங்களிடமும் உள்ளது என NACI கூறியுள்ளது.
இதுவரை கனடா முழுவதும் 2.3 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகள் மாத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளன. பல்வேறு உலகளாவிய காரணிகளால், அடுத்த தொகுதி எதிர்கால ஏற்றுமதி எப்போது கனடாவை வந்தடையும் என்பது குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது.