Nova Scotia மாகாணம் COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக Halifax பகுதிக்கான முழு பூட்டுதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
Nova Scotia வியாழக்கிழமை 38 புதிய தொற்றுக்களை அறிவித்தது. இது ஏறக்குறைய ஒரு ஆண்டில் பதிவான மிகப்பெரிய ஒற்றை நாள் தொற்றுக்களின் அதிகரிப்பாகும். இந்த நிலையில் தொற்று பரவுவதை தடுக்க உதவும் வகையில் மாகாணத்தின் முதல்வர் Halifax பகுதியில் சில சமூகங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை அறிவித்தார்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் அமுலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள் May மாதம் 20ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.