Ontario முதல்வர் Doug Ford தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.முதல்வரின் அலுவலக உதவியாளர் ஒருவர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனால் குறிப்பிட்ட உதவியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முதல்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். Ford திங்கட்கிழமையன்று பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பு கொண்டிருந்தார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த நிலையில் முதல்வர் COVID தொற்றுக்கு சோதனை செய்துள்ளார். ஆனாலும் முதல்வர் தொற்றால் பாதிக்கப்படவில்லை என சோதனை முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இருந்த போதிலும் அனைத்து பொது சுகாதார ஆலோசனைகளையும் முதல்வர் பின்பற்றுவார் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.