British Columbia மாகாணம் COVID தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதாக சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
குறிப்பாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். British Columbiaவில் இன்று வரை 368 பேர் வைத்தியசாலையில் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 121 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
British Colombiaவில் பதிவான தொற்றுக்களின் 50 சதவீதமானவை தொற்றின் புதிய திரிபுகள் என மாகாண சுகாதார அமைச்சர் Adrian Dix திங்கட்கிழமை தெரிவித்தார்.