இங்கிலாந்திற்கு பயணிக்கக் கூடியவர்களில் பாதுகாப்பான நாடுகளைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் கனடாவும் இணைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள COVID தொற்று எண்ணிக்கை, தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இங்கிலாந்து போக்குவரத்து துறை குறிப்பிட்டது.
இதனால் கனேடியர்கள் இங்கிலாந்திற்கு சென்றவுடன் தனிமைப் படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாற்றம் அறிவிக்கப்பட்ட போதிலும், நாட்டிற்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தொடர்ந்து பயணிகளுக்கு அறிவுறுத்துகிறது.